பக்கம்:இன்னொரு உரிமை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செத்தாலாவது வாழலாம் 187

“சொன்னேன்.”

“நம்ம கண்டிராக்டர் வீடே கட்டல! அவர் கேட்கிற சிமெண்டைக் கொடுக்காண்டாமுன்னு கமிஷனர் காதைக் கடிச்சியளா?”

“கடிக்கல! சத்தம் போட்டுச் சொன்னேன்”

“அங்கதான் விஷயமே இருக்கு. மிராசுதார் கிருஷ்ணசாமியும், காண்டிராக்டரும் போன வாரமே கலெக்டரைப் பார்த்து உங்களைப்பத்தி எதையோ எழுதிக் கொடுத்தாங்களாம்! எனக்கு என்னமோ...”

“இவன் எவண்டா இவன்! கிராம சேவக்கையா, நீங்க கவலைப்படாமப் போங்க.”

“எனக்காகக் கவலைப்பட நீங்க இருக்கும்போது நான் எதுக்காகக் கவலைப்படனும்?’” ராமலிங்கம் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்குப் போனார். விஸ்தரிப்பு அதிகாரி முதல் ஆபீஸ் பியூன்வரை அனைவரும் அவரை அனுதாபத்துடன் பார்த்தார்கள். கமிஷனரை அவர் சீக்கிரம் பார்க்கட்டும் என்பதுபோல் வராந்தாவில் கும்பலாக நின்றிருந்த அவர்கள் அவருக்கு வழி விட்டார்கள்.

கமிஷனர் அவரைப் பார்த்ததும், நாற்காலியை நகர்த்திக்கொண்டே “ஐ ஆம் ஸாரி மிஸ்டர் ஒங்கள பட்டியாம்பட்டி யூனியனுக்கு மாத்தியிருக்காங்க. பி.ஏ. பீடிக்கு கால் போட்டுச் சொன்னேன். கலெக்டரே போட்ட ஆர்டராம்! மாத்த முடியாதாம்!”

ராமலிங்கத்தால் முதலில் மூச்சுக்கூட விட முடிய வில்லை.

“ஸார்! இந்த இடத்துக்கு வந்து ஒரு வருஷம்கூட ஆகல்ல. அதுக்குள்ள மாத்துறதாய் இருந்தால் என்ன ஸார் அர்த்தம்! நான் என்ன தப்பு ஸார் பண்ணினேன்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/196&oldid=1369583" இலிருந்து மீள்விக்கப்பட்டது