பக்கம்:இன்னொரு உரிமை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188  சு. சமுத்திரம்

 "நீங்க தப்புப் பண்ணியிருந்தால் ஒங்கள மாத்தியிருக்க மாட்டாங்க நீங்க விவசாயத் தொழிலாளிகளைக் கிளர்ச்சி பண்ணும்படியா தூண்டிவிடுகிறதாக் கலெக்டர் கிட்ட மனுப்போயிருக்கு; மாத்திட்டார். ஐ ஆம் ஸாரி, சத்தியமாய்ச் சொல்றேன், ஒங்களவிட எனக்குத்தான் வருத்தம்!"

"ஸார்! இந்த டெவலப்மெண்ட் இலாகாவுல சேர்ந்து இருபது வருஷமாகுது. இதுக்குள்ள முப்பது இடத்துக்கு மாத்திட்டாங்க. அப்பா மெட்ராஸ் ஆஸ்பத்திரியிலே சாகக் கிடக்காரு! மனைவி நோயில கிடக்காள். சொந்தத் தம்பி கிட்டச் சொல்றமாதிரி சொல்றேன். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டமாய் இருக்கு. அப்பாவுக்காக வாரத்துல இருபது ரூபாய் ஆயுடுது. அவளுக்கு சிஸேரியன் ஆபரேஷனைச் சரியாச் செய்யாததுனால குடல் சரிஞ்சிருக்கிறதா டாக்டர் சொல்றாரு! அவளை ஜிஹெச்லே சேர்க்கலாமுன்னு இருக்கேன். இதுக்காகவே கிரேட் ஒன்றுக்கு புரமோட் பண்ணி 'டிரான்ஸ்பர் செய்தப்ப புரமோஷன் வேண்டாமுன்னுட்டேன். இது தெரிஞ்சும் என்னை மாத்துனால் நான் என்ன சார் பண்றது?"

"நான் என்ன பண்ணட்டும்?" "இது அநியாயம் ஸார்! பேமலி வெல்பர்ல முப்பத்தாறு பேர் டார்ஜெட் கொடுத்திங்க... 58 கேஸ் பிடிச்சிருக்கேன். சிறுசேமிப்புக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்க, ரெண்டாயிரத்து நூறு வாங்கிக் கொடுத்திருக்கேன். பதினைஞ்சு கம்போஸிட் குழி போட்டிருக்கேன்! ஒரு கோபர் கேஸ் பிளாண்டுக்குப் பதிலா அஞ்சு பிளாண்ட் போட்டிருக்கேன்! நான் என்ன சொல்லி என்ன செய்யல! நீங்களே சொல்லுங்க ஸார்."

"நான் என்ன பண்ணட்டும்... அந்தக் காலத்திலேயே "காய்ச்ச மரத்துல தான் கல்லு விழு' முன்னு பழமொழி இருக்கு. காய்ச்ச மரத்துல பழம் பறிக்கிறவன்மேல கல் விழுறதா ஒரு மொழியும் இல்ல! என்ன பண்றது... நீங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/197&oldid=1369090" இலிருந்து மீள்விக்கப்பட்டது