பக்கம்:இன்னொரு உரிமை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கதை இல்லாத நாயகி

திரைப்படப் பெரும்புள்ளிகளுக்கு மத்தியில், அவள் செல்லப்புள்ளியாய் நின்றாள். காதோரம் கறுப்பு டோலாக் காய் படர்ந்த முடிக்கற்றையை மேல் நோக்கி திருப்பிவிட்டபடியே ஒவ்வொரு புள்ளியையும் முற்றுப்புள்ளியாய் பார்த்தாள். இவர்கள் அத்தனைபேரும் இசை, நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவற்றில் பிரபல புள்ளிகள், அவள் ஒருத்திதான் 'ஒரு (க்)கால் புள்ளி', அதனால்தானோ என்னவோ, கண்ணுக்கு எதிரே தோன்றினாலும் இவர்களுக்குக் காட்சியாகாத தெய்வப்படங்களையே பார்த்தாள்.

"முருகா! இந்தப் படம் நூறு நாள் ஓடணுமுன்னு ஒன் அண்ணன்கிட்டே சொல்லு... விநாயகா! இந்தப்படம் வெற்றி விழா கொண்டாடணுமுன்னு ஒன் தம்பிக்கிட்டே சொல்லு."

அவள், தனக்குள்ளே புன்னகைத்தாள். வித்தியாசமான வளாய் மாறப்போவதால் இப்படி வித்தியாசமான வேண்டுதல் தோன்றுகிறதோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். 'எல்லாம் இந்தச் சந்திரனாலே... இவர் எழுதுற வசனங்களைப் பேசிப் பேசி இப்போ சிந்தனை கூட அவர் நடையிலேயே வருது' என்று மனதுக்குள் பேசிக் கொண்டே அவனைக் குறும்புத்தனமாகப் பார்த்தாள். குறுந்தாடியும், ஜோல்னா பையும் கொண்ட, 'அறிவுஜீவி'யான அந்தச் சந்திரன் 'கை கொடுப்பார்கள்' என்று நினைப் பவர்களுக்குக் கைகொடுத்துக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/203&oldid=1369065" இலிருந்து மீள்விக்கப்பட்டது