பக்கம்:இன்னொரு உரிமை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதை இல்லாத நாயகி 201


"ஐ அம் ஸாரிம்மா! புதுமுகத்தைப் போட்டால், அதுவும் தமிழ்ப்பெண்ணைப் போட்டால் படம் ஓடாதாம், டிஸ்ட்ரிபியூட்டரும், பைனான்சியரும், புரட்யூஸர்கிட்டே கண்டிப்போடு சொல்லிட்டாங்களாம்! ஒனக்கு செகண்ட் ரோல் கொடுக்கணுமுன்னால் ஏற்கனவே மஞ்சுவை..."

"நீங்க கொடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன். என்னோட ஏமாற்றம் மஞ்சுவுக்கு வரப்படாது. குறைந்த பட்சம் என் மூலம்.

"நீங்களும் முட்டாள் தனமாய் பேசுவீங்க... ஆனால் நான் தான் ஆமாம் போடமாட்டேன்!"

தமிழ்ச்செல்வியால், தன் சுயமரியாதை பாதிக்கப்பட்ட பாவலாவில் சந்திரன் அவளைக் கோபமாகப் பார்க்கிறான். அங்கே தான் நின்றால், அவளுக்குத்தான் ஆபத்து என்பது போலவும், அதை தான் விரும்பவில்லை என்பது போலவும் அவன் அவளுக்கு புறமுதுகு காட்டி நடக்கிறான்.

தமிழ்ச்செல்வியும் நடக்கிறாள். திரும்பிப் பாராமலே திரும்பி நடக்கிறாள்- அம்மாவுக்கு தடிமாடாய்; திரையுலகின் எக்ஸ்டிரா நடிகையாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/210&oldid=1369036" இலிருந்து மீள்விக்கப்பட்டது