பக்கம்:இன்னொரு உரிமை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206  சு. சமுத்திரம்


கிழவர் எதுவும் பேசவில்லை, கைப்பின்னலால், அம்பு முனைபோல் வடிவெடுத்த முழங்கை முனைகள் இரண்டையும் வைத்து கன்னங்களை இடித்துக்கொண்டார். பெரிய மகன் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. பேரப் பிள்ளைகள் வருவதே இல்லை. வெளியே போகும்போது எப்போதாவது நின்ற இடத்தில் நின்றபடியே உள்ளே எட்டிப் பார்க்கும் பெரியவன், பெற்றோரை தான் பெருமையாய் வைத்திருப்பது போலவும், இந்தக் காலத்து மற்ற மகன் களைப்போல். தான் ஒன்றும் அப்படி உதவாத மகனாக உருவெடுக்கவில்லை என்றும் நினைப்பதுபோல், தோளை ஒரு குலுக்குக் குலுக்கிக்கொண்டு போகிறான். மதுரையில் இருந்து பத்து நாளைக்கு முன்பு வந்த சின்ன மகனும், அவன் மனைவி மக்கள் சகிதங்களும் ஒரு பத்து நிமிடம்கூட முகம் பார்த்துப் பேசவில்லை, இவள் சொல்றது மாதிரி காலம் கெட்டுப் போயிட்டோ ?

அந்த முதியவள் எழுந்து விளக்கை அணைத்தாள்.

உள்ளே குரலொடுங்கியது போலிருந்தது. பிறகு -பாத்திரச் சத்தங்கள் கேட்பது மாதிரி இருந்தது. சிரிப்பில்லை. ஒருவேளை சிடுசிடுப்பான மௌனமோ...

இரவு பதினொரு மணிக்கு பேத்தி பாமா, சாப்பாட்டுத் தட்டுக்களோடு வந்தாள். "இன்னைக்கு மட்டுமாவது அவன் கொண்டு போகப்படாதா... இந்த வீட்ல இந்த வேலைக்கும் நான் தானா" என்று அவள் கத்திக்கொண்டே வந்தது பாட்டிக்கு நன்றாகவே கேட்டது.

பாமா ஸ்விட்சைத் தட்டினாள். ஸ்டூலில் சாப்பாட்டுத் தட்டுக்களை வைத்தாள். பிறகு அவர்களை இரக்கமாகப் பார்ப்பதுபோல் பார்த்தாள். பீடிகை போட்டுப் பேச வேண்டிய விவகாரத்தை எடுத்த எடுப்பிலேயே சொன்னாள். அவளுக்கும் அவசரம். பின்பக்கத்து வீட்டில், ரவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/215&oldid=1369012" இலிருந்து மீள்விக்கப்பட்டது