பக்கம்:இன்னொரு உரிமை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லவ் ஆல் 13


பட்டதுபோல் அல்லது ஒரு உடம்பில் ஐந்து முகங்கள் கொண்டவைபோல் பன்றியை நோக்கி சுவராஸ்யமாக நெருங்கின. நெருக்கியடிக்கப்பட்ட பன்றி ‘த்தூ... த்தூ... என்று ஒலமிட்டது. தாய்ப் பன்றியை விட்டுத் தனியாக வந்த தலைவிதியை நோவதுபோல், தலையைச் சுவரில் வைத்துத் தேய்த்தது. துவக்கத்தில் மெல்லக் கத்திய அந்தச் சின்னக்குட்டி இப்போது, பிரளயத்தைப் பிரசவிப்பதுபோல் ஒலமிட்டது. அந்த ஓலம் வாலிபால் ஆர்ப்பாட்டத்தைக் கூட மிஞ்சியது. உடல் கடிபடு முன்னாலேயே உயிரோலம் போட்ட அதன் பார்வை, வாலிபால் வீரர்களையும் பூச்சூடிய பெண்களையும், பழம் தின்ற சிறுவர்களையும் மாறி மாறிப் பார்த்தது. அந்தப் பந்துபோல் சுருண்டு, பழம் போல் நசிந்து, பூப்போல் மடிந்து அது புலம்பிய புலம்பல் இருக்கிறதே, அதைப் பார்க்காதவர்கட்கு, கேட்காதவர்கட்கு விளக்கமுடியாது. உதவி கிடைக்கும் என்றோ அல்லது மரண பயத்தாலோ அது கத்திய கத்தலுக்குப் பாதி பலன் கிடைத்தது.

பூச்சூடிய பெண்கள் திரும்பிப் பார்த்தது உண்மைதான். ஆனால் திரும்பிய வேகத்திலேயே தலையைத் திருப்பிக் கொண்டார்கள். அரைகுறைப் பார்வையோ அல்லது அசுர மகிழ்ச்சியோ டையன்கள் ஸாடிஸ வடிவாக நின்றார்கள். வாலிபால் மைதானத்திற்குள் முக்கியத்துவமில்லாத இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ஆனாலும் பன்றியின் மரணப் புலம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாய்களுக்கும், பன்றிக்கும் ஒரு அடிதான் இடைவெளி. குட்டியின் கண்களில் இருந்து நீர் விழுந்தது. அதன் வெண் சிவப்பு வாயில் துரை தள்ளியது. போராட முடியாத பதினைந்து நாள் குட்டி. கண்களை மூடியபடி அது பரிதாபமாய்க் கத்தியபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/22&oldid=1369514" இலிருந்து மீள்விக்கப்பட்டது