பக்கம்:இன்னொரு உரிமை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சின்ன மனிதர்கள்

“ஸார், வாட்ச்மேன் ஸார்.”

மோகனா, இப்படி, முப்பது தடவையாவது கூப்பிட்டிருப்பாள். அவசர அவசரமாயும், அழுத்தந்திருத்தமாகவும், ஒவ்வொரு வார்த்தையையும் இடைவெளி விட்டு உச்சரித்ததும், அது இல்லாமல் உச்சரித்ததும், அழுத்தமாய் அழைத்ததும், சத்தமிட்டதும் அப்புறம் கத்தியதும் வீணாயின.

வாட்ச்மேன் வைரவன் அசையவில்லை. அந்தக் காலைப் பொழுதான எட்டு மணியிலும், மல்லாந்து கிடந்தான். வெள்ளை யூனிபாரத்தை மடித்து, அதையே தலையணையாக வைத்துக்கொண்டு, மேஜை விரிப்புத் துணியையே பாயாக்கி, படுத்துக் கிடந்தான், முப்பது வயதுதான் இருக்கும். ஆனாலும் முழுக் கிழவன் போல் தெரிந்நான்.

மோகனா, அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள். சைக்கிள் காரனும், ஆட்டோ ரிக்ஷாகாரனும் மோதியதில் இடையில் அகப்பட்டு, காலைக் கோணலாக்கிய ஆறு வயது மகனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டும், அந்தக் கட்டை அவிழ்த்துவிட்டு, அடுத்த கட்டைப் போடுவார்கள். ஒன்பது மணிக்காவது ‘ஓபி’ வரிசைக்குப் போய்விட வேண்டும். இவ்வளவு பெரிய இடத்தையும் எப்போ பெருக்கி எப்போ துடைச்சு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/224&oldid=1369394" இலிருந்து மீள்விக்கப்பட்டது