பக்கம்:இன்னொரு உரிமை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அப்பால் 231

சாய்த்து அந்தக் கடிதத்தைப் பிடுங்கினான். அப்போதுதான் அவளுக்குத் தமிழ் எழுத்துக்கள் தெரியாது என்பதை உணர்ந்துகொண்டான். கையில் இருக்கும் காகிதம் காதல் தூதென்று அவன் விளம்பிவிட்டு, அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்தான்.

வித்யா சிரித்தாள். நாணத்துடன் சிரித்தாள்.

“டாமிட்... நான் ஒனக்கு இந்தியில் பதில் எழுதப் போறேன் பாரு... இங்கிலீஷ்ல எழுதினா என்னவாம்?” என்றாள். ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், அதில் இயல்பாக வரும் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டு, தன் காதலையே நிராகரித்துவிடலாம் என்று பயந்துபோன ரவி“ தமிழ் தாய்மொழி... அதுலதான் எழுதணும்” என்றான். உடனே அவள் டாமிட்... “ஒனக்கு இங்கிலீஷ் வரல. ஆனால்” என்று சொன்னபோது “காதல் வருது” என்று ரவி முடித்தான்.

அப்புறம் எஞ்சியிருந்த ஒரு வாரம்வரை, அவன் வித்யாவுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான். அவள் அவனுக்கு இந்தி கற்றுக் கொடுத்தாள். அளவோடு அவர்கள் பழகினாலும் அந்த அளவே அவர்களுக்கு ஒருவித புனிதத்தை ஏற்படுத்தியது.

வித்யா நடந்தவைகளை நினைத்து, நடக்கப்போவதில் திளைத்து மகிழ்ந்தாள். ‘இந்த மூணு வருஷமா... ரவி கண்ணாலகூட காதல் பண்ணலேன்னு நினைச்சது எவ்வளவு தப்பு. கடைசியில் அப்பா அம்மாகிட்ட பக்குவமாய்ச் சொல்லி அவனோட பர்த் டேயில என்னையே வாங்கிக்கிறானே? டாமிட்!’

வெள்ளிக்கிழமை வந்தது.

உனக்கு இந்த டிரெஸ் நல்லாருக்கு’ என்று ரவி டில்லியில், எதைச் சொன்னானோ, அதை அணிந்துகொண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/240&oldid=1369449" இலிருந்து மீள்விக்கப்பட்டது