பக்கம்:இன்னொரு உரிமை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அப்பால் 233

‘இப்படியா மனிதர்கள்’ என்று கொதித்து ‘இப்படித்தான் மனிதர்கள்’ என்று கொதித்தடங்கி விரக்தியின் வேகத்தில் வெடித்துக் கிளம்பிய பெருமூச்சு விழியோரத்தில் பட்டு, அந்த வேகத்தில் உப்பு நீர், உப்புச் சப்பற்ற அவள் வாழ்க் கையை எடுத்துக் கூறுவதுபோல் கன்னக் கதுப்புகளிலிருந்து இறங்கியபோது—

ரவி வந்தான்

“வித்யா இந்தப் பையனுக்கு என்ன குறைச்சல்? இந்தா பாரு! இந்த அழுகிற சமாசாரம் எனக்குப் பிடிக்காது. ஏன் பிடிக்கலேன்னு சொல்றே! எனக்குத் தெரிஞ்சாகணும்.”

வித்யா நிதானப்பட்டாள்.

“ரவி... நீ மன்னிக்கணும். நீங்க டில்லியில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கையில... தலையில் குட்டினிங்க இல்லியா?”

“அதுக்கென்ன இப்போ!”

அது செல்லக் குட்டுன்னு நினைச்சேன். ஆனால் அது உண்மையிலேயே சீரியஸான குட்டுன்னு இப்போதுதான் தெரியுது. உங்க குட்டை இப்போதான் தெரிஞ்சிக் கிட்டேன்!’’

அதுக்கென்ன இப்போ?’’

“இப்போ ஒண்னுமில்லை யூ ஆர் கரெக்ட்.”

“நீ எதையாவது நினைச்சால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விரலுக்குத் தக்கபடிதான் வீக்கம் என்கிறதை மறந்துட்டே...”

“உண்மையிலேயே நீங்க கெட்டிக்காரர்தான். கம்பெனியை மட்டுமல்லாம, உறவையும் கமர்ஷியலாய்ப் பார்க்கிறவர்! குவிக்கா முன்னுக்கு வந்துடுவீங்க! கங்கிராஜுலேஷன்ஸ்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/242&oldid=1369453" இலிருந்து மீள்விக்கப்பட்டது