பக்கம்:இன்னொரு உரிமை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமனுக்கு ஆகாது 31

இருந்து கதவைத் திறந்துகொண்டே, “கன்னிக்குடம் உடஞ்சிட்டுது... வண்டில போவமுடியாது. நல்லா சாமியக் கும்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கதவைச் சாத்தினாள். இப்போது முத்தையாவும் தன் தந்தை அய்யாவுடன் சேர்ந்துகொள்ள மாடனைக் கும்பிட்டான்.

அய்யாவு மகளை வெளியூரில் சுமாரான இடத்தில் கொடுத்திருந்தார். தலைப்பிரசவத்திற்காக பாக்கியம் ஒன்பது மாதம் ஆனபோது அழைத்து வந்தாள். முத்தையா தங்கச்சியை ‘டாக்டர்’ பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது அய்யாவு மறுத்துவிட்டார். கையில் காசில்லாத முத்தையாவும் அதிகமாக இதை ஆட்சேபிக்க வில்லை. ஒருநாள் தங்கை ‘வயித்த வலிக்குதுன்னு’ சொன்னதும், அய்யாவுக்குத் தெரியாமல் ஒரு ஹோமியோபதி டாக்டரைக் கூட்டிக்கொண்டு வந்தான். அவர் ஒரு ‘அல்லோபதி’ ஊசியைப் போட்டுவிட்டு, மேற்கொண்டும் பத்து ஊசிகளை போட்டுத்தான் ஆகவேண்டும் என்று, சொல்லிவிட்டுப் போய்விட்டார். விஷயம் தெரிந்த அய்யாவு, கொள்ளமாடனை சாட்சியாக வைத்துக்கொண்டு குதித்தார். மருமகள்காரி முதன்முதலாக மாமனாருக்கு ஆதரவு தெரிவித்ததால் முத்தையாவால் அந்தக் கூட்டணியை வெல்ல முடியவில்லை. அதை முறியடிக்கும் முயற்சிக்குரிய ‘டிபாஸிட்டும்’ அவனிடம் இல்லை.

திடீரென்று ஒரு ‘குவா குவா’ சத்தம் கேட்டது. பிறந்தது ஆண்பிள்ளை என்பதற்கு அடையாளமாக ‘பொம்பிளைகள்’ மூன்று தடவை குலவைவிட்டார்கள். முத்தையா அருகிலிருந்த தன் பையனை அணைத்துக் கொண்டான். அய்யாவு சொன்ன மாடனை நினைத்துக் கொண்டார்.

உள்ளே இருந்து வந்த ‘குடிமகள்’ திருமலைவடிவு யாரிடமும் பேசாமல் வெளியேறினாள். இந்தப் பிள்ளைத்காவது எனக்கு ஒரு சீல வேணும் நாடாரேன்னு பல தடவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/40&oldid=1388329" இலிருந்து மீள்விக்கப்பட்டது