பக்கம்:இன்னொரு உரிமை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமனுக்கு ஆகாது 37

கெட்டவுளுகா... மாலை சுத்தி பிறந்தானாம். கொல்லணுமாம்...! அப்படியே நான் போனால் போறேன்! நாப்பது வருஷம் வாழ்ந்தாச்சு என் தங்கச்சி மவன் சாகடிச்சிட்டு நான் வாழனுமா? அப்படியே நான் போயிட்டாலும் என் மருமவன் என் பேரச் சொல்லுவாண்டி ஒன் பிள்ள ஒன் அண்ணன் மாதிரி முடிச்சிமாறிப்பய பிள்ள... என் தங்கச்சி மவன் இருக்கதுக்காக நான் இறக்க தயாருடி... அறிவு கெட்டவுளுகா...”

அய்யாவு, “அப்படிச் சொல்லாதய்யா, சொல்லாதய்யா” என்று அவன் தோளில் தலையைவைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார். பாக்கியம் விம்மினாள். கிழவி தன் விரல்களுக்கு ‘சொடக்கு’ விட்டுக்கொண்டே அழுதாள்.

முத்தையா அவர்களைப் பார்த்தான்.

“அம்மா, ஒனக்குத்தான் சொல்லுகிறேன். என் தங்கச்சி மவன ஏதாவது பண்ணிட்டே... நான் ஒனக்கு பிள்ளையா இருக்கமாட்டேன்! எல்லாத்துக்கும் சொல்லுதேன்! ஏதாவது ஒண்னு கிடக்க ஒண்னு நடந்துதுன்னா மூட்டைப் பூச்சி மருந்த சாப்பிட்டுட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்துல போயி கிடப்பேன்! இது சத்தியமான வார்த்தை! குழந்தை கழுத்த பிடிக்காதம்மா... சொள்ளமாடன் காலப் போயி பிடி! பிள்ளய கொல்லப்போறாளுகளாம். அறிவு கெட்டவுளுக... என்னக் கொல்லணுமுன்னா பிள்ளயக் கொல்லு...”

முத்தையா போய்விட்டான். அய்யாவு தாத்தா மனைவியைப் பார்த்து, “பிள்ளக்கி தற்செயலா ஏதாவது நடந்தாலும் நீதான் செய்துட்டன்னு அந்த குரங்கு பய மவன் எதையாவது குடிச்கிடுவான். அதனால குழந்தைய ஜாக்கிரதையா பார்த்துக்கடி. ஒப்பன மாதிரி பராக்கு பாக்காத”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/46&oldid=1388340" இலிருந்து மீள்விக்கப்பட்டது