பக்கம்:இன்னொரு உரிமை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளைந்த தெங்கு முதல் சாகித்திய அகாதமி வரை

  நம் தமிழ் நாட்டில் இலக்கிய அரசியல் உலகிலும் சரி, வேதனையான சில விபரீதங் கள் விளையாடிக்கொண்டிருந்த நேரம். 1957லிருந்து 62 வரை இருக்கலாம். மகா கவி பாரதியாரைக் கோழை என்றும், வீரபாண்டியக் கட்டபொம்மனை 'கொள்ளைக்காரன்' என்றும் ஒரு எழுத்தாளர், ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக் கிறார்.

பண்டித ஜவஹர்லால் நேருஜி ஒருமுறை தமிழ கத்திற்கு விஜயம் செய்தபோது, நேருவே திரும்பிப் போ' என்றும், கறுப்புக்கொடி' காட்டியும், காலணி" களை எடுத்து வீசியும் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது ஒரு தேசவிரோத அரசியல் கூட்டம்.

இதைக் கண்டு குமுறிக் கொதித்தெழுந்த சில தேசிய இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து, தேசிய முழக்கம்' என்றொரு பத்திரிகையைத் துவக்கி, 'துடிக்கிறது தோள்! துலங்குகிறது வாள்! துரோகத் தேச விரோதக் கூட்டமே நீ தூள்! தூள்!!' என்று போர்க் குரலெழுப்பி தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/5&oldid=954021" இலிருந்து மீள்விக்கப்பட்டது