பக்கம்:இன்னொரு உரிமை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 சு. சமுத்திரம்

நடையுமாக நடந்தாள். பிட்ஸ்ஸ்... வுட்ஸஸ்... அந்த ரெண்டு ரூபாய் நோட்டையாவது வச்சிருக்கலாம். இப்போ வீட்டுக்கு எப்படிப் போவது? அடக்கடவுளே... கடவுள் எதுக்குடி... ஆட்டோ ரிக்க்ஷா இருக்குதே...”

வேதா எதிர்ப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷாக்களை கையாட்டியபடியே நடந்தாள். ஒருசிலர் கண்டுக்கவில்லை. ஆனாலும் ஒன்று வந்து நின்றது. அதுவும் கிழடு. அதன் டிரைவரும் கிழடு வேதா இனிமையாகக் கேட்டாள்:

“திருவான்மியூருக்கு வாறிங்களா...”

“அய்யோ! திருவான்மியூரா! எந்த ஊருக்குப் போனாலும் போவேன். அந்த ஊருக்கு மாட்டேம்மா!”

ஆட்டோக் கிழடு போய்விட்டார். அதுபோன வேகத்தில் இன்னொரு ஆட்டோ சடன் பிரேக்கால் சக்கரங்கள் தரையில் கோடுகள் போடும்படி வந்து நின்றது. அவளை எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோகத் தயார் என்பது போல் குறுந்தாடி டிரைவர் அவளை குற்றேவல்காரர் போல் பார்த்தார்.

வேதா அந்த ஆட்டோ ரிக்க்ஷாவில் ஆனந்தமாகத்தான் ஏறப்போனாள். திடீரென்று ஆட்டோக் கிழவர் சொல்லி விட்டுப்போன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சில திரைப்படங்களும், புத்தகங்களுக்குள் மூடி வைத்தும் படித்த, மாத நாவல்களும், இப்போதைய பத்திரிகை செய்திகளும் நெஞ்சுக்குள் ஊடுருவி அவளைப் பயமுறுத்தின. இந்த டிரைவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் எதில் ரிஸ்க் எடுத்தாலும் கற்பில் ரிஸ்க் எடுக்க முடியுமா...

வேதா ஆட்டோவை நோக்கி முன்வைத்த காலைப் பின் வைத்தாள். ஆட்டோ டிரைவர் முனங்கியபடியே வண்டியை நகர்த்தினார். வேதா நடக்க நடக்க யோசித்தாள். பஸ்சுக்கோ பணமில்லை. ஆட்டோவோ அபாயம். வீட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/51&oldid=1388391" இலிருந்து மீள்விக்கப்பட்டது