பக்கம்:இன்னொரு உரிமை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகலில் சென்னை 43

எப்படிப் போவது? திடீரென்று அவளின் படிக்காத சித்தப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது’ என்பார். டெலிபோனுக்கு உதவாதா என்ன... உதவும். வீட்டில் டெலிபோன் இருக்கு. அதுவும் பழைய படாதி டெலிபோன் அல்ல. பட்டன் கொண்ட டெலிபோன். டாடிக்கு போன் செய்தால் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஓடி வரமாட்டாரா...

வேதா பர்மா பஜாரைத் தாண்டி டெலிபோன் இருக்கும் கடைகளைப் பார்த்தபடியே நடந்தாள். பல கடைகளில் ஏறி இறங்கினாள். ஒரு கடையில் டெலிபோன் அவுட்டாப் ஆர்டராம். இன்னொரு கடையில் ரெண்டு ரூபாயாம். மற்றொன்றில் சாவி இல்லையாம். இந்தக் கடைகளை விட்டுவிட்டு, அல்லது அந்தக் கடைகளால் கைவிடப்பட்டு அவள் ஒரு துணிக்கடைக்குள் நுழைந்தாள். ஆண் பெண் ஆடைகளைக்கூட ஒன்றாக சேர்ப்பதில் ரசனை கண்டவர் போல் சேலைமேல் பேண்ட் துணியை விரித்துப் போட்ட் சேவகர் ஒருத்தர் அவளை வரவேற்றார். “பாலிஸ்டரா? பாரினா? பட்டா?” என்று அடுக்கடுக்காய் கேட்டார். வேதா முதல் தடவையாகப் பிச்சைக்குப் போனவள்போல் கேட்டாள்:

“வீட்டுக்கு ஒரு டெலிபோன் செய்யனும் சார்!”

“கொடுக்கிறதில்லம்மா...”

“பர்ஸ் பிக்பாக்கட் ஆயிட்டு சார். அப்பாவை ஸ்கூட்டர்ல வரச்சொல்லணும் சார்.”

“அய்யய்யோ! ஆனாலும் நான் ஒனர் இல்லம்மா.”

“அப்பா வந்ததும் நீங்க எந்தப் புடவையை எடுக்கச் சொல்றிங்களோ அதை எடுக்கிறேன் ஸார். அப்பாவையும் பேண்ட் பீஸ் எடுக்கச் சொல்றேன் ஸார்! டெலிபோன் பீஸையும் கொடுத்திடுறேன். ஸார்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/52&oldid=1388393" இலிருந்து மீள்விக்கப்பட்டது