பக்கம்:இன்னொரு உரிமை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘வெட்டி’ மனிதர்கள்


ரிகளின் ஊளை அடங்கி, காட்டுக் கோழியின் கேவலா அல்லது கூவலா என்று கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு மிகையான ஒலி, அவனை உசுப்பியது. சிதம்பரம், அவிழ்ந்திருந்த வேட்டியை, படுத்தபடியே கட்டிக்கொண்டான். ஒரு கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான கிராமத்தில் இருந்து, ஒரு கோழிச் சத்தம், அவனுக்கு நன்றாகக் கேட்டதென்றால், அது அந்த கோழியின் பெருத்த சத்தமென்று அர்த்தமாகாது. அந்த நொண்டிக் கோழியின் சத்தத்தைக் கேட்கும்படி எங்கும் நிலவிய நிசப்தம் அனுமதித்தது. வினாடிபோல் கழிந்த இரவின் இறுதிக் கட்டத்தில், யுகம்போல் எழும் பகலை எதிர்நோக்கிப் புரண்டான்.

சிதம்பரம், கண்களை கசக்கிக்கொண்டே எழுந்தான். சுவரோடு சேர்த்துப் போட்டிருந்த பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்தான். அவனது ஒரு கால், தனியே கிடப்பதுபோல் தரையில் கிடந்தது. அரணைக் கயிறு கால் சட்டைப் பட்டைக்கு மேலே பாதியும், வயிற்றில் பாதியுமாக மிதந்தது. சிதம்பரத்திற்குத் தம்பியை எழுப்ப மனமில்லை. அந்தப் பையன், ஆயுள் காலத் துக்கத்தையெல்லாம் அன்றே தூங்கிவிடப் போகிறவன் போலவும், வேலைமிக்க பகல்பொழுதைச் சந்திக்க மறந்தவன் போல

சி.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/58&oldid=1388400" இலிருந்து மீள்விக்கப்பட்டது