பக்கம்:இன்னொரு உரிமை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெட்டி மனிதர்கள் 59

 விட்டு இறக்கலாம் என்று நினைத்தவன்போல் தம்பிக்கும் தனக்குமாக இரண்டு இரண்டு தோசைகளை எடுத்துக் கொண்டு உட்காரப்போனான். இருவரும் இரண்டுதடவை 'டீ' குடித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

திடீரென்று ஒரு அதட்டுக் குரல்.

'டேய்... சிதம்பரம்! காலையிலயே நாலு தோசை பார்ஸல் அனுப்புன்னு ஆள்மூலம் சொன்னேனே, ஏண்டா அனுப்பல?'

தேவஸ்தானத்தில் ஒரு சின்ன அதிகாரி. ஆனால் சிதம்பரத்திற்கோ பெரிய அதிகாரி. அதட்டினார். சைக்கிளை அனாவசியமாகப் பிடித்திருத்தார்.

'ஏண்டா பேசமாட்டங்கே! தேவஸ்தானம் நிலத்துல , கடை போட்டிருக்கே! லைசன்ஸ் இன்னும் கொடுக்கல. இதுக்குள்ள இவ்வளவு திமுறா! என்னடா, நினைச்சிக் கிட்டே! உங்களெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கனும்!'

சிதம்பரம் ஒன்றும் நினைக்காதவன்போல், சாப்பிடப் போன நான்கு தோசைகளையும், சட்னியுடன் சேர்த்துப் பார்ஸலாகக் கட்டி சைக்கிளில், வைக்க வேண்டிய இடத்தில் வைத்தான். கொடுக்கமாட்டேன் லைசென்ஸ் என்று சொல்லிட்டா, அதோட இவரு, போலீஸ்காரன், காட்டு அதிகாரி-இவங்களவிட நல்ல மனுஷன் வாரத்துல ரெண்டு தடவ, இல்லன்னா, மூணுதடவதான் தோசப் பார்ஸல் கேட்பாரு.

ஒருமாதம், ஒடுவது தெரியாமல் ஓடியது. சிதம்பரத் தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கலர் சோடா போடு கிறவர் அவற்றை நிறுத்தியதுடன் பாக்கியைக் கேட்டார். பால்காரர், வரவர தண்ணீர் பாலை கொடுக்கிறார். ஒவ்வோருவர் பாக்கிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர். அரிசி வாங்க பணம் இல்லை. கடையில் பொறைகள் மட்டுந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/68&oldid=1368788" இலிருந்து மீள்விக்கப்பட்டது