பக்கம்:இன்னொரு உரிமை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெட்டி மனிதர்கள் 61


அடித்த களைப்பு தீருவதற்காக, போலீஸ்காரரும், காட்டிலாகாவும் கடைக்குள் வந்தார்கள். 'மலையில போய், சந்தனமரத்தை வெட்டுறான். இந்த வயசுலேயே புத்தியப் பாரு! ஸ்டேஷனுக்கு வா! இனிமே நீ ஜென்மத்துலேயும் மலையேற முடியாமப் பண்றேன்’ என்று போலீஸ்காரர் சபதம் போட, 'காட்டு' அதிகாரி கண்களால் அதை. அங்கீகரிக்க இருவரும் உட்கார்ந்தார்கள். சிதம்பரம், இருவர் முன்னாலும் இலை போட்டு சுடச்சுட தோசை போட்டான். 'கப்' டீயாக போட்டுக் கொடுத்தான். ஒரு தடவை, காட்டிலாகா மனிதர் காதில் விழும்படி பேசிய அதே சிறுவன்தான், வெளியே கைக்கட்டோடு நின்றான்.

இருவரும் கை கழுவிவிட்டு, டம்ளர்களை காலியாக்கி: விட்டு அந்தச் சிறுவனை 'நடடா... ராஸ்கல்! திருட்டுச் சோம்பேறி!' என்று சொல்லிக்கொண்டே கடைவாசலைக் கடக்கப்போனபோது சிதம்பரம் சாவகாசமாகக் கேட்டான்.

'ஸார்... காச வச்சிட்டு நடங்க!'

இருவரும் அவனைக் கோபத்துடன் பார்த்தபோது சிதம்பரம் சீறினான்.

"இப்ப சாப்பிட்ட காசு மட்டுமில்ல! இதுவரைக்கும் சாப்பிட்ட கணக்க தீர்க்காமல் ஒரு அடிகூட நகரக்கூடாது. யாருய்யா திருட்டுச் சோம்பேறி, ஒரு மாசமா என்னை மிரட்டி ஒசில சாப்பிட்ட நீங்க திருட்டுச் சோம்பேறியா! இல்ல, வயித்துக்காவ மலைக்குப்போன இந்தப் பையனா! இவனப் பிடிக்க, ஒங்களுக்கு என்னய்யா யோக்கியத இருக்கு? சரிசரி, காச வையுங்க இல்லன்னா தொப்பியக் கழட்டுவேன்.

போலீஸ்காரர் தன்னையறியாமலே கத்தினார்.

'யாருகிட்ட பேசுறோமுன்னு நெனச்சுப் பேசுடா... ஒன் கடைய குளோஸ் பண்ண அதிகநேரம் ஆகாது.'

சொன்னவர், தான் செயல்வீரர் என்பதை நிரூபிக்க கையை ஒங்கினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/70&oldid=1368803" இலிருந்து மீள்விக்கப்பட்டது