பக்கம்:இன்னொரு உரிமை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களுர் தெரஸா

 கர்நாடகத் தலைநகரில்-அதன் முதல் சொல்லுக்கு எதிர்மாறான பகுதி. கலைச்செல்வமிக்க பண்டைய திரைப் படங்களைப் பேணிக்காக்கும் பாதாமி இல்லத்திற்கும், நிஜச் செல்வம் கொழிக்கும் பல்மாடி அங்காடிக்கும் இடையே சிக்னல் விளக்குகள், விலங்குகளின் இரவுக் காலக் கண்கள் போல மின்னின. குறுக்குச்சால் ஒட்டும் சைக்கிள்களில் இருந்து, அகலக் கால் விரிக்கும் பஸ்கள் வரை புலியின் உறுமலுடன், பூனையின் பெளவியத்துடன் ஒட்டப்பந்தய தளத்தில் ஆயத்த நிலையில் நிற்கும் 'பி. டி. உஷாக்களைப் போலப் பரபரத்து நின்றபோது

ஒரு வரிசை வண்டிகளின் நடுப்பகுதியில் அந்த அரசாங்க அம்பாஸிடர் காரில் ஒட்டுநர் இருக்கையில் உட்கார்ந்திருந்த லிங்கையா எதையும் நோக்காமல் தனக்குள் தன்னையே நோக்கிக் கொண்டிருந்தான்.

அவன் மனச்சாட்சி தன் பக்கமும், மனைவியின் பக்கமும் பெண்டுலம்போல் ஆடியது. இந்த எட்டாண்டுக் கால சர்விஸில், கடந்த ஐந்தாண்டு காலமாக- அதாவது இப்போதைய அதிகாரி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக் ஒழமையும், பெரும்பாலான அரசாங்க விடுமுறை நாட் களிலும் அதிகாரியின் வீட்டுக்குக் காரோடு போய், அவரின் மனைவி மக்களைச் சுமந்துபோவதையும், அரிசி மூட்டை, மளிகைச் சாமான்கள் அடிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/73&oldid=1368979" இலிருந்து மீள்விக்கப்பட்டது