பக்கம்:இன்னொரு உரிமை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு அசாத்திய அசத்தல் தெரியும். சில கதைகளின் முடிவுகள் நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது. ‘’நெஞ்சு பொருக்குதில்லையே ‘’ என்ற பாரதியின் வெஞ்சினமும்,'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் நெஞ்சிரக்கமும் இவர் கதைகளில் கிறைந்திருக்கின்றன.

இவர் பாத்திரங்கள் வட்டாரத் தமிழில் பேசுவது தான் படிப்பதற்குக் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஒருவேளை இந்த வட்டார நடையே தம் வெற்றிக்குக் காரணம் என்று இவர் கினைக்கிறாரோ என்னவோ!

சமுத்திரம் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பாரோ என்று ஒரு முறை வானதியார் என்னிடம் ஒரு வினாவை எழுப்பினார் . நான் அவரைப்பற்றிய உண்மைகளைச் சொல்லி, அவர் கதைகள் வானதியில் வெளிவர வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.

அவர் அதை ஏற்று, அழகிய முறையில் இச் சிறு கதைத் தொகுப்பைப் பதிப்பித்து வெளியிட்டுள்ள பதிப்பக வேந்தர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல பதிப்பகம் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நண்பர் சமுத்திரம் நிறைய எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,

மு. தர்மலிங்கம்

(தேசிய முழக்கம்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/8&oldid=983071" இலிருந்து மீள்விக்கப்பட்டது