பக்கம்:இன்னொரு உரிமை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 79


படாதே. நீ நல்ல பொண்ணு. ஒன் புருஷன் தோட்டத்துல என்ன பண்ணினான்? சொல்லும்மா என் ராசாத்தி, சும்மாச் சொல்லு. அட ஒன்னத்தாம்மா! சொல்லு. நீ சொன்னாத்தான் அவனைக் குணப்படுத்த முடியும்! என்ன பண்ணுனான்?"

"பாத்தி போட்டுக்கிட்டு..."

"சரி! பாத்தி போட்டுட்டு... என்ன தின்னான்?"

" எதையோ தின்னாரு... பச்சை நிறத்துல, உருண்டை உருண்டையா!"

"நீ என்ன பண்ணுன?"

"எனக்கு ஒண்னு தாங்கன்னேன். "

"தந்தானா?”

"இல்ல! உன் வேலயப் பாருன்னு கத்துனாரு.'

"அவன் தின்னது தங்கரளிக்கொட்டையா? இல்ல... வேற எதுவுமா?’’

"நான் சரியாப் பாக்கல.

வைரமணிக்கு நுரை அதிகமாகத் தள்ளிக்கொண்டே போனது. வைத்தியரைத் தேடி ஒருவர் பின் ஒருவராக நான்கைந்து பேர் போய்விட்டனர்.

'மயினிக்காரி' பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தம்பிக்காரன் கனகராஜால் தாளமுடியவில்லை. வெறிப் பிடித்தவன்போல் லிங்கம்மாவின் முடியைப் பிடித்துக் கொண்டு கன்னத்திலும் முதுகிலுமாக அடித்தான்.

"செருக்கி மவளுக்குப் புத்தி இருக்கா? கட்டுன புருஷன் செத்துக்கிட்டுகிடக்கான். என்ன தின்னான்னு பாக்கலியாம். புருஷன் மேல அவ்வளவு அக்கறை."

ஐயாசாமி அடித்தவனுக்கு ஒரு அறை கொடுத்துவிட்டு "ஒனக்கு அறிவிருக்கா? அவள் சங்கதிதான் தெரிஞ்ச விஷய மாச்சே! போடா... அந்தப் பக்கமா" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/88&oldid=1369124" இலிருந்து மீள்விக்கப்பட்டது