பக்கம்:இன்னொரு உரிமை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பொண்ணு இருக்கா... பொண்ணு இருக்கா'ன்னு தண்டோரா போட்டால் கூட விஷயம் அப்படிப் பரவியிருக்காது. ஏற்கனவே வைரமணி கதையை வாசித்துக்கொண்டிருந்த ஊரார்கள், இந்தப் புதிய அத்தியாயத்தைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பினார்கள், "சே ஒரு பொண்ண தள்ளி வச்சிட்டு இன்னொரு பொண்ணு வாழணுமா?" என்று நினைத்துக்கூடப் பார்க்காமல் பல பெண் வீட்டார் போட்டியிட்டார்கள்.

வெளியூர் என்றாலே கிலி பிடித்துப் போன வைரமணி உள்ளூரில் ஏழைக் குடும்பத்துப் பெண் ஒருத்தியை மணக்கச் சம்மதித்தான், நல்ல அழகு, நல்ல குணம்.

நிச்சயதாம்பூலமும் ஆகிவிட்டது.

இதற்கு முன்பு கல்யாணம் என்ற ஒன்று நடக்காதது மா திரி, ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. பந்தலுக்கு அட்வான்ஸ்: மேளத்துக்கு அட்வான்ஸ்; ஆக்கிப் போடுபவர்கள்- இப்படியாக தினமும் இரண்டு கட்டு வெற்றிலை செலவாகும் அளவிற்கு சதா ஏதாவது ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்தது.

திருமணத்திற்கு ஒரு நாள் இருந்தது.

வைரமணி 'டெய்லரிடம்' சட்டைக்கு அளவுஅகொடுத்துக்கொண்டிருந்தவன் தேள் கொட்டியவன் போல் துள்ளிக் குதித்தான்.

லிங்கம்மாவும் அவள் தந்தையும் வந்துகொண்டிருந்தார்கள். வைரமணி ஆத்திரத்தோடு ஏதோ பேசப் போனான். ஆனால் மாமனார் வரும்போதே பேசிக்கொண்டு வந்தார்.

"ஒங்க கல்யாணத்தை நிறுத்தறதுக்காக வர்ல மாப்பிள்ள. நான் கோர்ட்டுக்குக் கூடப் போயி உங்கள ஜெயிலுல போட முடியும். ஆனால் நான் செய்யப்போறதில்ல. ஏன்னா உங்க நிலைமை எனக்குப் புரியுது. இவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/95&oldid=1369130" இலிருந்து மீள்விக்கப்பட்டது