உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14



இங்கு குறித்தது-மட்டான இன்பம்-சிற்றின்பம் என்க. அதன் பிறகு நிலையான இன்பம், நிலையற்ற இன்பம் என இரண்டு உண்டா?

நிலையான இன்பம் என ஒன்று இருக்கவே முடியாது. இருப்பின் அது இன்பமல்ல என்று மறுக்க, இறந்தவனின் ஆன்மா நிலைத்த இன்பத்தை யடைவதாய்க் கூறுவதில் உண்மையுண்டா எனின், கூறுவேன்;

‘தலைநாளில் கோல் என்பது ஆட்சியாயிற்று. கோலன், (கோல் எடுத்தவன்) ஆள்வோன்; அரசன் என்று போற்றப்பட்டான். ஆயினும், அவன்- அக்கோலன் தனக்கு அஞ்சி வரும் பெருமக்கள், மற்றொரு நாள் தன்னை மீறுதல் கூடும் என்று அஞ்சியே கிடந்தான், அவன் மக்களின் அறிவை இருட்டாக்கவும். ஏமாற்றவும் துணை தேடினான். தன் நாட்டானைக் கருவியாகக் கொள்ள அவன் வெள்கினான். ஆரியன் வந்தான்; அவன் அரசனின் துணையை விரும்பினான்.

முற்பிறப்பில் நல்வினை செய்ததால் இப்பிறப்பில் இவன் அரசனானான்! முற்பிறப்பில் தீவினை செய்தால் இப்பிறப்பில் இப்பெருமக்கள் ஆட்பட்டார். ஆட்பட்டோர் இப்பிறப்பில் நல்வினை செய்து மறுபிறப்பில் உயர்நிலை யடைவதன்றி எம் முயற்சியும் பலிக்காது. ஆதலால் ஆட்பட்டோர் நான் கூறும் வகையில் என்னை வழிபட்டுக் கிடக்க, அரசனும் அடுத்த பிறவியில் தாழாது பெருநிலை