பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

16 எழுத்தையும் தெரிந்தாள். அவளை நீ, கிட்டுதற் கரிதென்று கருதினாய். துன்பம் பெரிதுற்றாய் அவளோ உன்னைத் தொட்டிழுத்து வலிய அணைத் தாள். இன்பம் பெரிதுற்றாய். அவள் அறிவை உன் அறிவால் அறிந்தாய். ஒரே நேரத்தில் உன் கண், மூக்கு, காது, மெய், வாய், அறிவு அனைத் தும் பேரின்பம் நுகர்கின்றன! இனி, இப்பேரின்பம் துன்பத்தின் பயன்தானோ என்று கேட்பின், காதல் என்னும் தீயின் பயனே இது! அவள் கிட்டுவாளோ என்று காத்த முயற்சி யின் பயனே இப் பேரின்பம்! இதன் பின்னும், அவன் 'ஊடல் பிரிதல்’ என்ற துன்பத்தின் பயனாகவே இன்பத்தை யடைதல் வேண்டும். திராவிட நாடு 22-4-1945