உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
இன்பம்

புலவர் ந. மாணிக்கம், தில்லை

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம் நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி புலவர் ந. மாணிக்கம் தில்லை அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

இன்பம் என்பது என்ன?

இன்பத்தைக் குறித்து உலகோர் அனைவரும் பேசுகின்றனர். ஒரு மனிதனே ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றை இன்பம் என்று கூறிடக் கேட்கின்றோம். நம் நாட்டு மத நூல்கள் உயிரின் குறிக்கோளே இன்பம் எய்துவதுதான் என்றும் அதற்காகத்தான் உயிர்கள் தோன்றுகின்றன என்றும் அல்வுலக இன்பங்கள் எல்லாம் சிற்றின்பம் என்றும் இறைவனோடு கலக்கும் இன்பமே பேரின்பம் என்றும் சிற்றின்பம் அழிந்து போவது என்றும்