18
பேரின்பம் அழிவில்லாததென்றும் கூறுகின்றனர். முதற்கண் இன்பத்தின் இயல்பு இன்னதென அறுதியிட்டு முடிவு கட்டல் இதன் உண்மை பொய்மையை வெளிப்படுத்துவனவாகும்.
விஞ்ஞானிகள் இவ்வுலகம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கின்றது என்பர். இயங்கும் உலகத்தில் இயக்கத்தினால் மனதில் உண்டாகும் ஒரு உணர்ச்சியையே இன்பம் என்று மக்கள் கூறுகின்றனர் என்று உலகினர் வாய்ச் சொல் கொண்டே நிறுவ இயலும். ஆடுதல், பாடுதல், உண்ணல், காண்டல், கருதுதல், ஓடுதல், கூடுதல், கேட்டல், முகர்தல் என்பனபோல உலகில் மக்கள் ஆற்றுகின்ற தொழில்கள் அனைத்துமே, பொருள் இடம் காலத்தின் ஒற்றுமையினால் மனத்தில் ஒரு கிளர்ச்சியை விளைவிக்கக் காணுகிறோம், வெறுக்கத்தக்கன, இகழத்தக்கன, நகைக்கத்தக்கன. மயங்கத்தக்கன, போன்ற நிகழ்ச்சிகள் மனத்தினைப் பற்றும் போது ஒவ்வொரு வகையான கிளர்ச்சியுண்டாகின்றது. இவற்றிற்கு நாம் வெவ்வேறு பெயர் கூறிக் குறிப்பிடுகின்றோம். அது போலவே பொருள், இடம், காலம் துணை செய்ய நிகழ்த்தும் ஒவ்வொரு தொழிலும் மனதைப்பற்றி ஒரு வகையான கிளர்ச்சியை விளைவிக்க நாம் இன்பம் என்று அதனைக் கூறுகின்றோம்.
இவ்வின்பம் தானும் உலகில் எல்லோருக்கும் ஒரே படித்தாக அமைகின்றதா எனின் இல்லை யென்றே துணிந்து கூறலாம். உலகிலுள்ள