20
மேலே வலிமையென்று கூறியது. இங்குக் கூறிய வலிமையின் பிரிவுகளுக்கு வெவ்வேறு பெயர் தரலாம். மனவலிமையென்பது அகவலிமை, உடல்வலிமையென்பது இகப்புற வலிமை, பொருள் வலிமை என்பது புறவலிமை, ஆள் வலிமை என்பது புலப்புற வலிமை, இந்நான்கு வகையான வலிமைகளும் அகவலிமையில்லாது ஏனைய வலிமைகள் ஒருவனுக்கு வேறு காரணங்களால் வாய்த்திருப்பினும் இன்பம் என்பதைக் காணலும் அரிதாகும். அகவலிமை இருந்து ஏனைய வலிமைகள் இல்லாதிருப்பினும் ஒருவனுக்குத் தீதின்று, அகவலிமையுடையவன் ஏனைய வலிமைகளை உடையனாவதும் அகவலிமைக்குரிய இயல்பேயாகும். இதனால் இன்பமும் நுகர்பவனுக்கு மனவலிமையே இன்றியமையாது வேண்டப்படுவதாகும் என உறுதியிட்டு கூறலாம். ஆனால் ஏனைய வலிமைகள் வேண்டுவதில்லை என்பது இதன் கருத்தன்று.
நம் நாட்டு மக்களுள் எவ்வளவு பேர் இந்த அகவலிமையை உடையவர்கள்? அகவலிமையென்பது ஒருவனுக்கு எவ்வாறு அமையும்? நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கூறிய கவியின் வாக்கு, இன்றளவும் ஆழியவில்லை. அஞ்சியஞ்சிச் சாகும் இயல்புடைய மக்கள்தானே நம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? மக்கள் அனைவரும் இயற்கையில் மனவலிமை யுடையாரே ஆயினும் நம்நாட்டு மக்கள் ஏன்