பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28இனி, இன்பத்தின் முடிவுதான் துன்பமெனவும் துன்பத்தின் முடிவுதான் இன்பமெனவும் கூறும் கூற்றை ஆராய்வோம். மேலெழுந்தவாறு நோக்குங்கால், அது அங்ஙனம் தோற்றுவது இயல்பேயாம். கூர்ந்து, நுணுகிப்பார்க்க, அது அங்ஙனமில்லையென்பது (தெற்றெனப்) புலனாகும்,

இன்பம் துன்பம் என உள்ள இரண்டு தோற்றங்களும், ஒன்றிற்கொன்று நேர்மாறான தன்மைகளையுடையன. இதுபோன்ற இரண்டு மாறுபட்ட பொருள்கள் சந்திக்கும்பொழுது, இந்த இரண்டுமல்லாத ஒரு இடத்தில்தான். அல்லது. இந்த இரண்டுங்கலந்து, தன்மை மாறுபட்ட ஒரு இடத்தில்தான், இவைகள் சந்திக்க முடியும். ஒரு கறுப்பு நூலுடையவும், ஒரு சிகப்பு நூலுடையவும், துணிகள் அணுக வைக்கப்பட்டால், அவைகள் நூல் அல்லாத ஒரு சிறிய இடைவெளியில் சந்திக்கும்; அன்றிப் பிணைக்கப்பட்டால், அவைகள் சேரும் இடம், ஒரு செம்மை கலந்த கறுப்பு நிறமானதாயிருக்கும். மோட்டார் வண்டியில், முன், பின் போக ‘கீர்’கள் மாற்றும்பொழுது, அந்தக் ‘கீர்’ ஒரு நிலையிலிருந்து, பொதுநிலைக்கு வந்து பின் மற்றோர் நிலைக்குப் போதலும்; ஒரு கோணத்தின் இரண்டு கைகள், இரண்டுக்கும் சம்பந்தமான ஒரு பொதுப் புள்ளியில் சந்திப்பதும் இத்ற்குப் பின்னும் உதாரணங்களாக அமையும். எனவே, இன்பமும் துன்பமும் சந்திக்குமிடம், இன்பதுன்பமில்லாத அல்லது அவை இரண்டுங்கலந்த ஒரு இடமாகத்