பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

தான் இருக்க முடியும். விவாத ஒழுங்குப்படி இப்படித்தான் இருக்கமுடியும். வெளிப்படையாகக் காணுவதும் அங்ஙணமே இருத்தல் காண்க.

இன்பம் முடியும்பொழுது, இன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம்; துன்பம் முடியும் பொழுது, துன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்த ‘இல்லாத’ என்ற நிலைமை, நேர்மாறான நிலையாக எங்ஙணம் கூறமுடியும்? பொது நிலையாகிய மாறுபட்ட நிலையென்றாலும் பொருந்தலாம்.

இதுவேயன்றி, இன்பத்திற்குமேல் இன்பமும், துன்பத்தைத் தொடர்ந்த துன்பமும் ஏற்படுவது இயற்கையாயிருக்க, இன்பத்தின் முடிவு துன்பமென்றும், துன்பத்தின் முடிவு இன்பமென்றும் கூறுதல் எங்கனம் பொருந்தும்?

மேலும், துன்பத்தின் முடிவு இன்பமாயும், இன்பத்தின் முடிவு துன்பமாயும் இருந்தால், அவை ஒன்றை யொன்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்குமல்லாது, இன்ப துன்பமில்லாத ஒருநிலை இதன் இடையே எங்ங்ணம் புகமுடியும்? இன்ப துன்பமில்லாத ஒருநிலை இருப்பதற்கும், அதைப் பற்றி இவர்களே கூறும் கூற்றுக்கும், என்ன அடைவு சொல்வது?