பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5
இன்பம்

டி. வி. நாராயணசாமி

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால், என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி டி. வி. நாராயணசாமி அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மாலைக் கதிரவன் மறைந்து கொண்டிருக்கிறான், மேற்குத் திக்கிலே ஒளிமயம், மாசுமருவற்ற ஆகாயத்தின் அடிவாரத்திலே தகதகவென, மின்னிக்கொண்டிருகிறான் அவன். அவன்தரும் மஞ்சள் நிற வெயில் ஆற்றோரம் அடர்ந்திருக்கும் மாமரச் சோலையிலே-அதனருகே ஓங்கி நிற்கும் தென்னஞ் சோலையிலே, படுகிறது, ஆகா! என்னென்பேன் அக்காட்சியை வீசுத் தென்றலால் ஆடும் தென்னங்குருத்தோலைகள் கண்ணிலே குளிர்ச்சியை ஊற்றியது. குயிலின் குரலோசை