34
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மார்கழி மாதத்தில் ஒர் நாள். அதே இடத்திலே அந்தச் சன்னலருகே நின்றுகொண்டிருந்தேன் 5 மணிகூட ஆகியிருக்காது. பனிவீசத் தொடங்கியது. வீட்டுக் கூடத்தில் தபீல் தபீல் என்று அறையும் சத்தம் கேட்டது. என் இருதயத்தைக் கொடுந்தேள் கொட்டியது போன்ற உணர்ச்சி, பெரிய பையன் ஐயோ! அப்பா! அப்பா என்று கூவினான். மறுகணம் மாடிமீது வந்து நின்றாள் கமலா. சிடுசிடுத்த முகத்தோடு இடுப்பிலே கைகுழந்தை இருந்தது. அவளது முகத்திலே படர்ந்த கோப அனல் தாளாமலோ என்னவோ வீர்வீர் என்று கத்தியது கைக்குழந்தை. என்ன கமலா என்று நான் கேட்க ஆரம்பிக்கவில்லை. ஆமாம், நிரம்பவும் இலட்சணந்தான், நல்ல பிள்ளைகளைப் பெற்றீர்கள். கொஞ்ச நேரமாவது அமைதியிருக்கா தெருவிலே எது போனாலும் வாங்கித் தரவேண்டு மென்று கூச்சல். இது (கைக்குழந்தை) தொட்டிலில் கிடப்பேனா பார் என்று அடம் செய்கிறது. சமையற் காரியத்தை முடிப்பதற்குள் இந்தச் சங்கடம். வேலைக்கார முத்தம்மாள் இன்று வரவில்லை. அவளுக்குச், சம்பளம் தந்தால்தானே! முருக விலாசம் துணிக்கடைப் பையன் பாக்கியை வாங்கிப் போகவந்தான். மளிகைக்கடைச் செட்டியார் கோபித்துக் கொண்டாராம். எங்கேயாவது கடன்கிடன் வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று உள்ளத்திலிருந்த துன்ப வெள்ளத்தைக் கொட்டி