35
விட்டாள். அந்தத் துன்ப வெள்ளத்தினூடே அகப்பட்டுத் தத்தளித்தது என் மனம். பெரிய வார்த்தை பேச முடியவில்லை. இன்னும் கடன் வாங்க வேண்டுமா? இருப்பது போதாதா! என்றேன் கம்மிய குரலில், அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்றாள். சன்னல் வழியாக என்பார்வை ஊடுருவிச் சென்றது; எங்கும் துன்பக் காட்சிகனா, எதிர்ப்படவேண்டும்!
பகலவன் தகதகவெனச் சுழல்கிறான். என்னுள்ளமும் தகதகவென எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சத் தூரத்தில் ஐந்தாறு குடிசைகள், அங்கே சில வடிவங்கள் குந்தியிருந்தன. இடுப்பிலே கரிய கந்தல், தலைமயிர் குப்பை கூளங்கள் நிறைந்த தொட்டிபோல இருந்தது. சில சின்னக் குழந்தைகள் புழுதியோடு புழுதியாக உருமாறிக் கீழே உருண்டன. உழவன் ஒருவன் இரண்டு மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்றான். அவைகளில் எலும்பு தவிர வேறொன்றும் காணோம், கொம்புகள் மட்டும் வாடாமல் இருந்தன. அம் மாடுகள் சாகமாட்டாமல்-காலடி எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றன. பின்னே செல்லும் உழவன் ஒரு கிழவன், மரக்கலப்பையைத் தோளிலே போட்டுக் கொண்டு நத்தைபோல் நகர்ந்து சென்றான். வளைந்த உடல், தரைத்தலை, ஐயோ இந்த வயதிலே அவன் துன்பப்படவும் வேண்டுமா? ஏனிந்தக் கோரம் இதனை நீக்க ஓர்