உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

 இந்நிலையில் இன்பத்தை எங்கே தேடுவது? இன்பம் எது என்று கூறுவது? ஆண் பெண் இரு பாலாரும் கூடி இருந்தால் துன்பமே முன்னிற்கும். வாழ்வின் தேவை பூர்த்தி செய்யப்படும் அந்நாளில் தான் இன்பந்தோன்றும். ஒருதனி மனிதனுக்கு மட்டுமல்ல. மனித இனத்துக்கே இன்பம் எதுவெனத் தெரியவேண்டுமாயின், மனிதனை ஒடுக்கும் வறுமை ஒழியவேண்டும்.

பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஒரு சில இலட்சம் பேர் சுகபோகிகளாகி, உல்லாச உருவங்களாகத் திகழ்வதும் ஏனைய பெரும்பாலான மக்கள் சுகபோகிகளின் உல்லாச வாழ்விற்கென உதித்தவர்போல இருப்பதுமான பேதக் கொடுமை ஏற்றத்தாழ்வு நீங்கி, மனிதனை மனிதனாக எண்ணி மேற்குலம்-தாழ்குலம் எனும் இழிவான சாதிப்பித்தம் நீக்கப்பட்டு, மனித சமுதாய வாழ்வதற்கென வகையான திட்டம் அமைத்து, அத்திட்டத்தின் அடிப்படையிலே, புதியதோர். மனித சமுதாயம் தோன்றினால், நிலையான இன்பம் எது என்பதைக் காணலாம். இன்றிருக்கும் மனித சமுதாயமோ பூசல்களை உண்டாக்கிவைக்கும் கலாசாலை! அதிலே பயிற்றுவிக்கப்படுகிறது தனி மனித உணர்ச்சி. என் பிள்ளை, என்விடு, என் சொத்து, என்ற சத்தற்ற கொள்கை. அந்தக்

இ.-3