இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்பம்
இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், கனமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி பல நூலாசிரியரும் முன்னாள் திராவிடன் துணை ஆசிரியருமான தோழர் எஸ். எஸ். அருணகிரி நாதர் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.
இன்பம்! இன்பம்! இன்பம்!!! உலகத்திலே இன்பத்தை வேண்டாத மக்களில்லை. மக்கள் மட்டுமா இன்பத்தை வேண்டுகின்றனர்? பறவைகளும், விலங்குகளும், வேறு காணப்படுகின்ற எத்தனையோ உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன! இன்பத்திற்காக மக்கள் அலைகின்றனர்; திரிகின்றனர்; இன்பத்தைத் தேடுகின்றனர். பகுத்தறிவற்றவைகள் என்று மக்களால் கருதப்படும்