பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41

இன்பம்! பிரிவால் துன்பம்! குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களைக் கண்டால் இன்பம்! அவற்றை இழந்துவிட்டால் துன்பம்! அறிவாளர்களுக்கோ இயற்கையின் வாயிலாக ஓர் உண்மையைக் காணும்போது இன்பம்! ஜேம்ஸ்வாட் எனும் ஓர் ஆங்கில இளைஞன் அடுப்பால் சுடுநீர் கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நீராவியின் வேகத்தால் தடதடவென்று பாத்திரத்தில் மூடி குலுக்கப்பட்டது. அதை அறிந்த வாட்ஸ் நீராவியின் உதவியைக் கொண்டு உலகத்தில் எத்தனையோ அற்புதங்களைக் காணலாம் என்று எண்ணினான். உடனே அவன் குழந்தை உள்ளத்தில் இன்பம் குதித்துத் தோன்றியது. அது அவன் கண்ட இன்பம்.

”இதுவரையில் கண்டறிந்த நிலப்பாகத்தைத் தவிர வேறு நிலப்பாகம் இருந்தே தீரவேண்டும்.” என்று கொலம்பஸ் நினைத்தார். புதிய நிலப்பரப்பை புதிய கண்டத்தைக் காணவேண்டுமென்று அதற்கான வழிவகைகளைத் தேடலானார் கொலம்பஸ், உதவி வேண்டிய அளவுக்கு எளிதில் கிடைக்கவில்லை. உதவி பெறுவதற்காக அவர் அமைந்த துன்பம் கொஞ்சமல்ல. இறுதியிலே அப்போதிருந்த, ஸ்பெயின் தேசத்து ராணி இஸபெல்லாவுக்குக் கொலம்பசின் எண்ணமும் அதற்கான முயற்சியும் தெரிந்தது. இராணியார் கொலம்பசுக்கு மூன்று கப்பல்களையும் அதற்கு வேண்டிய பொருள்களையும் ஆட்களையும் கொடுத்து உதவினார்! கொலம்பஸ் ஒரு நான் ஸ்பெயின் துறைமுகத்திலிருந்து