பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42

கப்பலில் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். நாட்களாயின! வாரங்களாயின! மாதங்களும் சில சென்றன. எங்குபார்த்தாலும் ஒரே தண்ணீர்-கடல்! சமுத்திரம்! எத்தனைநாள் தான் இப்படிப் பிரயாணம் செய்வது போகாத ஊருக்கு வழி எது என்பார்கள் சிலர்! உண்மையில் கொலம்பஸ் போகாத ஊருக்குத்தான் வழித்தேடினார். அவரோடு சென்றவர்களுக்கு ”இனி ஊர் இல்லை. நிலமில்லை, பாவி கொலம்பஸ் நம்மைக் கொல்லவே நம்மை நமது மனைவி மக்களிடமிருந்து பிரித்துக் கொண்டுவந்துவிட்டான்” என்று முணுமுணுத்தனர். பிறகு நன்றாகவே இப்படிச் சொன்னார்கள், இவ்வார்த்தைகள் கொலம்பசின் காதிலும்பட்டது. பலர், "புதிய கண்டம் ஒன்றிருந்தால் நமது பெரியோர்கள் எழுதி வைத்திருக்க மாட்டார்களா? இந்தக் கொலம்பஸ் நமது பெரியோர்களை காட்டிலும் என்ன மேதாவியா? என்றெல்லாம் சொன்னார்கள்.

சிலமுரடர்கள் ஒருநாள் கொலம்பசினிடம் போய், “நீர் மரியாதையாகக் கப்பலைத் திருப்பும் ஸ்பெயினுக்கு இல்லாவிட்டால் உம்மை நாங்கள் கடலில் எறிந்துவிட்டு நீர் இறந்துவிட்டதாக ஸ்பெயினில் போய் சொல்லிவிட்டு எங்கள் மனைவி மக்களோடு சேர்ந்துவிவோம்,” என்று உண்மையாகவே சொன்னார்கள். கொலம்பஸ் பயந்தார். ஆறு மாதமாயிற்று நாம் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டு எங்கு பார்த்தாலும் ஒரே சமுத்திரம்! எங்கே