பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43

இருக்கிறது நிலம்? நீ ஒரு பைத்தியம்! அந்த இஸபெல்லா உனக்கு மேல் பெரிய பைத்தியம், என்ன சொல்லுகிறீர்?” என்று மறுபடியும் ஒரு கேள்வியோடு உறுமினர் அந்தமுரடர்கள். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஏதாவது ஊர் கிடைக்காவிட்டால் ஊருக்கு - ஸ்பெயினுக்குத் திரும்பி விடலாம் என்று கொலம்பஸ் பணிவாகச் சொன்னார்! கப்பல் மேலும், செல்லும் திசை நோக்கியே சென்று கொண்டிருந்தது. மறுநாள் விடியற்காலையில் கப்பலாட்களில் ஒருவன் அதோ தரை!! தரை!! என்று கூச்சலிட்டான். அவன் காட்டிய திசைநோக்கிக் கவனித்தவர்கள் எல்லோரும், “ஆம், ஆம்” என்று கூச்சலிட்டனர், உண்மையில் தரைதான்! நிலந்தான்; போகாத ஊருக்கு வழிதேடினார் கொலம்பஸ். அதுவரையில் எவரும் போகாத ஊரைக்கண்டுபிடித்தார், மறுநாள் படகில் கரையை அடைந்து தரையில் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டார் கொலம்பஸ், அப்போது அவருக்கு அளவில்லாத இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம்; அவருக்கு இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிஸன் பேசும்படம் தயாரிக்கும் விதத்தை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தார்! இப்படியே அவர் கிராமபோன் ”எலக்ட்ரிக் ரெயின்” முதலிய பல அருமைக்கருவிகளைக் கண்டுபிடித்தபோதெல்லாம் அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்கவேண்டும். பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலில் உள்ள் மின்சார சக்தியை