44
யும், அதற்குரிய காரணத்தையும் கண்டுபிடித்தபோது அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும். இப்படியே விஞ்ஞானிகள் பலர் தாங்கள் இயற்கையை ஒன்று கூட்டிப் பல அற்புதங்களைக் காணும்போதெல்லாம் அவர்கள் இன்பம் அடைந்திருப்பார்கள் என்பதில் தடை என்ன? இப்படியே நல்லதொரு கவியை இயற்றிய புலவன் மனத்திலும் இறந்ததொரு சித்திரத்தைத் தீட்டி முடித்த சித்திரக்காரன் மனத்திலும் இன்பந் தோன்றுவது இயற்கையே! இப்படியே உண்மையை ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறவர்கள் மனத்தில் இன்பம்தோன்றும், “உலகம் தட்டையா யில்லை; உருண்டையாய் இருக்கிறது, இருப்பது இந்த உலகம் மட்டுமல்ல இதைச் சேர்ந்த இன்னும் பலகிரகங்கள் இருக்கின்றன,” என்று கலிலியோ சொன்னபோது அக்காலத்தில் இருந்த அவர்நாட்டு மக்கள் அவரைப் படாதபாடுபடுத்தினர். ஆனாலும் அவர்தாம் உண்மை என்று கண்டவற்றைச்சொல்லாமல் இருக்கவில்லை, உண்மையைச் சொல்வதில் அவருக்கு இன்பம் இருந்தது. ஆகவே, உண்மையைச் சொல்வதனால் நேருவது மரணமானாலும் அவர் அதையே விரும்பி நஞ்சை உண்டு மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயிர் வாழ்வதை விட உண்மையைச் சொல்லி இறப்பதே இன்பமாகத் தோன்றியது.
இப்படியே உலகில் பலருக்குப் பலவழிகள் இன்பம் தருவதாக இருந்திருக்கின்றன. சிறந்த பேச்சுச் சிலருக்கு இன்பமாக இருக்கலாம். சிறந்த