பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

 சிலசமயங்களிலே சிலகாலங்களிலே உண்மையாளர்களுக்குத் துன்பம் ஏற்படலாம். அதற்குச் சரித்திரமே சாட்சியாய் இருக்கிறது. ஆனாலும் கடைசிவரையில் பொய் பேசி உயர்ந்தவர்களோ மெய்சொன்னதால் தாழ்ந்தவர்களோ இல்லை. சாக்கரடீட்சும், கலிலியோவும் அவர்கள் காலத்தில் உண்மை சொன்னதற்காகப் பாமரமக்களால் இகழப்பட்டது உண்மைதான். ஆனால், அறிவாளிகள் இன்று அவர்கள் சொல்லியதெல்லாம் உயர்வான கருத்துக்கள் என்று புகழ்கிறார்கள். உண்மையாளர்கள் சீக்கிரத்தில் உயரவில்லைதான். உயர்ந்த பிறகு தாழ்வதில்லை. சமய சந்தர்ப்பத்திற்கேற்றபடி தங்களைச் சரிப் படுத்திக் கொள்ளுகிறவர்கள் விரைவில் உயரலாம், விஷயம் விளங்கிவிட்டாலோ...!

இன்றைக்கு உண்மையைப் பேசுகின்ற எழுதுகின்ற-பெரியார் மெய்க்கு இடமளிக்கவிருப்பமில்லாத மனத்தையுடைய மக்களின் மனத்திலே இடம்பெறாதிருக்கலாம்! ஆனால், தற்கால-எதிர்கால உண்மையான மக்களின் மனத்திலே இடம் பெற்றிருக்கிறவரும், இடம் பெறப்போகிறவரும் இவரே!

முடிவாக நாம் சொல்லுவது இதுதான். பொய் பேசுகிறவர்கள் மனத்திலே இன்பம் இராது. அவர்கள் அடிக்கடி நாம் யாரிடத்தில் என்ன பொய்யைச் சொன்னோம் என்றே நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். அது எப்போதும் முடியக் கூடிய வேலையும் அல்ல! அதனால் குழப்பமே;