பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
இன்பம்

எஸ். தனபாக்கியம்

இன்பம். இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி தோழியர் பொள்ளாச்சி எஸ் தனபாக்கியம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மாலை வேளை; மலைவாயில் வீழ்கிறான் ஆதவன். கண்ணாம்பூச்சி பிடிப்பதுபோல், கீழ்த்திசையில் செம்பொற் குடம்போல் மிதக்கத் திக்குத் திகந்தமெல்லாம் வெண்ணிலாப் பரவுகின்றது, நிலவினது ஒளிபட்டு அடர்ந்த பந்தரிலே இருண்டு படர்ந்துள்ள முல்லை மலர்கிறது. நிலவொளியால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சியால்தான்! போதாக உள்ள அது அக்காந்த சக்தி பட்டவுடன் ஆவினது அணித்தே அதன் அணைப்பிலே உள்ள கன்று, புறஞ்சிறை வாரணத்தின் கூடாரப் பாதுகாப்பிலே