50
அடங்கிய அதன் குஞ்சுகள் இவைகளின் தன்மையை அடைகின்றன! ஆவும் அதன் கன்றும் கோழியும் அதன் குஞ்சுகளும். ஒரே விதமான இன்ப நிலை அடைகின்றன. மனிதருக்குள்ளது போன்ற ஓர் பேசும் கருவியை இயற்கை அவைகளுக்கு அளித்திருக்குமானால் அதனதன் இன்ப நிலையை மனிதன் காட்டுவதைவிட அழகிய முறையில் ஒழுங்கான முறையில்-வெளிப்படுத்தும்! இப்பண்புகளை நாம் ஓரளவு கண்ணால் காணலாமே யொழியக் கற்பனையால் சிந்திக்கலாமே தவிர, உள்ளவாறு எடுத்துரைத்தல் முடியாத தொன்றாம். ஓரிடத்திலே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதைக் கண்ணுற்றவர் பல மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொடுப்பர். அதேபோலத்தான் பகுத்தறிவில்லாத விலங்கினத்தைப் பற்றி நாம் நினைப்பதும். அவைகளின் இன்பதுன்ப நிலைமையைப் பற்றிக் கூறுதல் சாத்யமன்று.
இரவிலே, இளந்தென்றலிலே - நிலவினது ஒப்பற்ற தட்ப ஆட்சியில் முல்லை நாயகி அசைந்தாடுகின்றாள். நிருத்தம் புரிகின்றாள். இன்ப முண்டாகும்போது ஏற்படும் மகிழ்ச்சியினால் இளித்த வாயர்களாவர் மனிதர்; விலங்குகளும் அவ்வாறே. மற்றைய ஊர்வன, தாவரங்களின் இப்பண்பைக் காணுதல் முடியாது. நிலவொளியின் காந்த சக்தி கண்டு முல்லையாள் தன் வாய்திறந்து. நகைக்கின்றாள் இதழ்கள் விரித்து, இதே நிலவொளி தாமரையாளுக்குத் துன்பத்தை உண்