பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
51

டாக்குகிறது. இரவு பூராவும் இத்தகைய இன்ப நிலை.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் மறைகிறது. வைகறையை உணர்ந்த இயற்கையின் தொண்டர்களான சேவலும், காகமும் தம் கடமையை நிறைவேற்றுகின்றன. பனிப்பகையோன் பரந்த ஒளிவீசிக் கொண்டு தோன்றுகின்றான். சூரிய ஒளிபட்டவுடன் முல்லையாள்வாடி வதங்கிச் சுருங்குகிறாள். இரவிலே காணப்பட்ட இன்பம் மறைகிறது. துன்பம் வந்து விடுகின்றது. புன்னகை தவழக் காட்சியளித்த முல்லையாள் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறாள். சூரிய வெப்பம் முல்லையாளுக்குத் துன்பமுண்டாக்குகிறது இதே வெப்பம் தாமரையாளுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. இவை இயற்கையில் காணப்படும் முரணான சித்திரங்கள்! மாறுபட்ட தோற்றங்கள்! ஒரே காலத்தில் சூரிய சந்திரர்களால் அவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.

கவிஞன் ஒருவன், கற்பனைக் களஞ்சியம், கவி இயற்ற உட்காருகிறான். அவனது இன்ப நிலையிலே கடல் மடைதிறந்தாலன்ன கவி ஊற்றுக் கிளம்புகிறது. எதுகை, மோனை, சீர் இவைகள் தானாகவே அமைகின்றன. கவிதைக்கு முடிவை உண்டாக்குகிறான் கவிஞன் பிறகு திரும்ப அதை ஓர்முறை. இருமுறை பார்க்கிறான். சில சீர்த்திருத்தங்களைச் செய்து தன் உருவெடுத்ததன் தன்மை கண்டு ஓர் இன்பத்தை உணர்கிறான். அதைப்