பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

படிக்கும் நாமும் இன்பமடைகிறோம். கவிதையிலே உள்ள இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு நம் மனமும் மாறுபடுகின்றது. கவிஞனின் மேதைகண்டு மகிழ்கிறோம். அதே கவிஞன் தனக்கு ஏற்படும் துன்ப நிலையில் கவி இயற்ற முற்படுவானாகில் அது கடைசிவரை வெற்றி அளிக்காது. ஆயிரம் அடித்தல் திருத்தல்கள், காகிதக் கிழிப்புகள், நேர இடமேற்படும்! எழுது கருவிகொண்டு மண்டையில் தட்டிக்கொள்வான். திலகமிடுமிடத்தில் கைவிரல் செல்லுகின்றது. விரலுக்கும் அந்த இடத்திற்குமுள்ள ஏதோ அறிய முடியாத ஒன்று-அஜந்தா இரகசியம் போன்ற உணர்ச்சி-அவன் கற்பனையைத் தூண்டுகின்றது.

பண் இசைக்கும் ஒருவனுடைய இசை இசைக் கலையிலே இசை வெள்ளம் கரை கடந்து செல்லுகின்றது. பாடுவோரையும் கேட்போரையும் மெய் மறக்கச் செய்கின்றது. பலே! சபாஷ்! என்று உற்சாக மூட்டுகின்றனர். கேட்போரும் கைதட்டலைக் கூடச் சேர்த்துக் கொள்கின்றனர். அங்குள்ள அனைவரும் இசைமயமான இன்ப-வெள்ளத்தில் மூழ்குகின்றனர். இசை பாடுபவன் துன்ப நிலையில் அமர்வானாகில் அவ்விசை சோபிக்காது. எல்லோருக்கும் அதே நிலை ஏற்படும். இது இசை அரங்கில் காணப்படும் ஓர் தோற்றம். ஓர் ஓவியனும் சிற்பியும். ஒவியன் இன்ப நிலையிலே ஓர் ஓவியம் தீட்டமுற்படுவானாகில் அது நன்கு அமையும். துன்ப நிலையிலே முடிவுறாது.