உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

அலுப்புத் தோன்றும்; சினமுண்டாகும். சிற்பியும் சிற்றுளிகொண்டு சிலை அமைக்க இன்பநிலையிலே முற்பட்டால் சீரிய கருத்துக்களினால் சிறந்த ஓர் சிலை தோன்றும். துன்ப நிலையில் இதற்கு நேர் மாறாக அவனது சிந்தனை சிதறும்!

இதனால் இன்பம் எது? அதன் தன்மை என்ன? என்று ஆராய்ந்தால் எளிதில் கிடைக்கப் பெறாத ஒன்று-விரும்பப்பட்ட ஒன்று விரைவில் கிட்டினால் அதன் பயன்தான் இன்பம். இயற்கை இந்த இன்பத்தை அவரவர்களுக்கு ஏற்ற முறையில் அளிக்கின்றது. மாசுமருவற்ற தூய உள்ளத்துடன் பகற்கனவுகள் கண்டு பரிதபிக்கத்தக்க தன்மையில் அல்லாமல், அச்சம் போக்கி, ஆண்மைகொண்டு, இச்சகத்துள்ளோரை ஈகையுடன், உயர்வறு முறையில் ஊக்கமாக ஆதரித்து ஐயங்கள் தவிர்த்து, ஒளி குன்றாமல், ஓங்கிய நிலையில் ஊட்டப்படும், ஒளதடமே இன்பம்! பொதுவாக இயற்கை அழகைத் தன் அகக்கண் கொண்டு நுண்ணிய கருத்துக்களால் ஆராய்பவன் இன்பமடைவான்.

திராவிட நாடு
27-5-1945

இ-4