உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
இன்பம்

மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம்; நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி மேட்டுர் டி. கே. இராமச்சந்திரன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

உடலை வருத்துவது துன்பம், உடலை, உள்ளத்தை குளிர்விப்பது இன்பம், இதைத்தான் பலரும் பொதுவாகக்கூறுகின்றனர். இதுதவிர நிலையாய இன்பம், நிலையற்ற இன்பம் என்றும், மரண நிலைக்குப்பின்னர் கற்பகதருவும் காமதேனுவும் அருளும் பேரின்பத்தைப்பற்றியுங்கூடச் சிலர் கூறுகின்றனர். மரணநிலைக்கு அப்பாற்பட்ட இன்பத்தைப்பற்றிச் சடலம் அழிந்து சவக்குழியின் மணற்புதைப்பிலே புதையுண்டுகிடக்கும் பிரேதங்கள் விவாதித்துக் கொண்டிருக்கட்டும். நாம் இன்னும்