பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59

59 அந்த ரீதியில் இன்பம் என்பதைப் பற்றிப் பேசுவோமானால், திராவிட இனத்தின் இன்பத் தைப்பற்றித்தான் பேசமுடியும். பேசவும் வேண்டும். பொதுவான இன்பம் நிலையாக இருக்கவேண்டு மானால் பொருளாதார பேத அமைப்புப் போக் கடிக்கப்பட்டுப், பிறவி காரணமாக ஏற்படுத்தப் பட்டுள்ள உயர்வு தாழ்வு பிய்த்தெறியப்பட்டு, மதத் துறையிலே படிந்துள்ள மாசுதுடைக்கப் பட்டுக் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போகும் படிசெய்து, எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சம உரிமை தரப்பட்ட காலத்தில்தான் அத்தகைய 'இன்பம்’ எல்லோருக்கும் கிடைக்கும், . திராவிட நாடு 3-6-1945