இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்பம்
இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்கவேண்டும்? இவையற்றித் தோழர் ராய. சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய ‘இன்பம்’ என்ற நூலில் இருந்து முல்லைப் பதிப்பகத் தோழர் முத்தையா அவர்கள் தொகுத்தனுப்பிய கருத்து இங்கு தரப்படுகிறது.
இப்பரந்த பேருலகில் பிறந்தவர் அனைவரும் விரும்புவது இன்பம் என்பதை எவரும் மறுக்கத் துணியார். இன்பமன்றித் துன்பத்தைப் பேதையும் கருதார். ஆனால் இன்பம் எது என்பதிலேயே பெரிய ஐயப்பாடு இருக்கின்றது. உலகத்தில் வசிக்கும் மக்கள் பலப்பலகோடியாவர். இத்துணைக்கோடி மக்களில் இருவர் கருத்துக்கூட எல்லாவற்றினும் ஒவ்வுதல் அருமை. எத்துணை