உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

நெருங்கிய நண்பரும் மிகப் பெரும்பாலான கருத்துகள் ஒன்றுதல் பெற்றிருந்த போதிலும் சிலவற்றில் மாறுபட காண்கின்றோம். உளத்தின் போக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி எனவே, வேண்டுவது எல்லோர்க்கும் இன்பம் என்ற ஒருபொருளே யெனினும், ஒவ்வொருவர் ஒவ்வொன்றை இன்பமாகக் கருதுகின்றனர். இது நாள் தோறும் கண்கூடாக அனைவரும் கண்டு வருவதே.

ஒருவர் வேளை தவறாது நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு காலங்கழிப்பதை இன்பமெனக் கருதுகின்றார். ஒருவருக்கு வாணாளில் பெரும்பகுதி நன்றாக உறக்கம் பிடிப்பது இன்பமாக இருக்கின்றது-ஒருவர் மக்களை நிறையப் பெற்றுக் கொண்டிருந்தாற் போதும் அதுவே இன்பம் எனக் கொள்கின்றார். ஒருவர் உளம் பெரிய மாளிகை போன்ற வீடொன்றைக் கட்டிக்கொண்டு அதில் உறைதல் இன்பமென உணர்கிறது. ஒருவர் இயந்திர வண்டிகளிலேறி உல்லாசமாகத் திரிவது இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் உச்சிமுதல் உள்ளங்கால் வரையும் நல்ல ஆடை அணிகளைப் பூட்டிக்கொள்ளுதலே இன்பம் என நினைக்கின்றார். ஒருவர் பெண்ணின்பத்தைத் தவிர உலகில் வேறு இன்பம் எது எனப் பேசுகின்றார் ஒருவருக்குப் பிறன்மனை நச்சுதல் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பிறன்தோள் பொருந்துதல் இன்பமqகத் தோன்றுகின்றது. ஒருவருக்குச் சீட்டாட்டத்தில்