பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62

உள்ள இன்பம் வேறு எதிலும் இருப்பதில்லை. ஒருவருக்கு மது உண்டல் இன்பம். ஒருவருக்குப் புலால் அருந்துதல் இன்பம், ஒருவருக்குப் புகையிலை பாதி விழுங்குதல் பேரின்பம்,

ஒருவருக்குச் சட்டசபை செல்வதில் இன்பம் ஒருவருக்கு அதனை வெட்ட வெளியாக்குவதில் இன்பம் ஒருவருக்கு அங்கு சென்று முட்டுக்கட்டை போடுவதில் இன்பம், ஒருவருக்கு அதிகாரிகட்குக் காலணிபோல் நடப்பதில் இன்பம். ஒருவருக்குப் பட்டம் வாங்குவதில் இன்பம். ஒருவருக்கு அது நாராசமாகத் தோன்றுகிறது. ஒருவருக்குப் பிறருக்கு இடையூறு செய்வதில் இன்பம். ஒருவர் தம்மைப் பிறர் புகழ்வதே இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் பிறர் வசை உரைத்தலை இன்பமாகக் கொள்கின்றனர். ஒருவர் புறங் கூறுதலை இன்பமாகக் கூறுகின்றார். ஒருவர் பொய் புகல்தல் இன்பமெ நினைக்கிறார். ஒருவர் எவ்வாற்றானும் பொருள்சேர்த்தல் ஒன்றே இன்பமெனக் கருதுகின்றார். ஒருவர் தனக்குப் பலர் கீழ்ப்படிந்து நடத்தல் இன்பமென உணர்கின்றார். ஒருவர் தன்னைப் பெரிய மனிதன் என்று பலர் சொல்லுவதுதான் இன்பமென எண்ணுகின்றார்; அதன் பொருட்டு ஏராளமாகப் போருளைச் செலவிடுகின்றார். திருவிளையாடல் பலபுரிகின்றார். ஒருவருக்குத் தெருக்கூத்து இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு நாடகம் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பாட்மிண்டன் என்று கூறுகின்ற பந்து