பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
63

விளையாட்டு இன்பமாக இருக்கின்றது. இவை நிற்க.

ஒருவருக்குப் பத்திரிகை படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு நாவல் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு அறிவு நூல்கள் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு சொன்மாரி பொழிவது இன்பமாகவிருக்கின்றது ஒருவருக்கு அதனைக் கேட்பது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்கு இசையில் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு அவைத் தலைமை வகித்தல் இன்பமாக இருக்கிறது. ஒருவருக்கு கழுத்து நிறைய மாலை வாங்கிக்கொள்வது இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு உபசாரப் பத்திரம் பெறுவது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்குப் பிறர் இகழ்ச்சி புகழ்ச்சி எதையும் எண்ணாது செயலில் அன்பர் பணிசெய்தல் ஒன்றே இன்பமாக விருக்கின்றது.

இவ்வாறாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் இன்பமாகத் தோன்றுகின்றது. ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் பொருள் மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. உதாரணம் பல கூறலாம் ஒருவருக்கு பிறனில் விழைதல் முதல் பேரின்பம், இன்னொருவருக்கு அதைக்கேட்பதும் பெருந்துன்பம் ஒருவருக்குப் படிப்பதில் இன்பம்; மற்றொருவருக்கு படிப்பென்றால் எல்றையற்ற துன்பம்; இப்படியே ஒவ்வொன்றினும் ஒரேபொருள்