பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

ஒருவருக்கு இன்பத்தையும் வேறொருவருக்குத் துன்பத்தையும் செய்கின்றது. எனவே இன்பம் என்ற ஒன்றை எப்பொருளும் பெற்றிருக்கவில்லை. எந்தப் பொருளுக்கேனும் அதன் இயற்கைக்குணம் இன்பமாக இருக்குமானால் அது ஒரே படித்தாக எல்லாருக்கும் இன்பந்தந்து நிற்கவேண்டும். அவ்வாறு எந்தப் பொருளும் எல்லோருக்கும் இன்பந்தந்து நிற்கமுடியாது. ஆதலின் எந்தப் பொருளுக்கும் இன்பம் தரும் குணமில்லை. மாம்பழத்திற்கு ருசி, இனிப்பு என்றால் அது எல்லோருக்கும் இனிக்குமேயன்றி எவருக்கேனும் பிறிதாக விருக்குமோ? இன்பத்தில் அவ்வாறில்லை. நூல்கள் விதித்தன. சிலருக்கு இன்பமாக இருக்கின்றன. நூல்கள் விலக்கியவற்றை இன்பமெனக் கொள்வாரும் எண்ணற்றாரிருக்கின்றன என்பதை முன்கூறியவை கொண்டே அறிதலாகும். ஆக, இன்பம் பாண்டிருக்கின்றது அது எப்பொருளினும் இல்லை. உள்ளத்தில் இருக்கின்றது. எவர் உள்ளம் எப்பொருளை இன்பமெனக் கருதிற்றோ ஆண்டு அப்பொருளிடத்து அவர் இன்பம் நுகர்கின்றார், எனவே இன்பம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி என்பது தேற்றம்.

பொருளில் இன்பம் இருப்பதாகக் கருதுதல் அறியாமை. கூர்ந்து ஆராயும் எவரும் பொருளில் இன்பம் இல்லை யென்பதை ஏற்பர். இவ்வுண்மை ஓராமையினாலேயே மக்கள் இன்பம் இன்பம் என எண்ணித் தீய செயல்பல செய்தழிகின்றனர். இன்பம்,